தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் தன் கொள்கைகளை அறிவிப்பார் என்பதால் முதல் மாநாடு மீதான எதிர்பார்ப்ப அவர் ரசிகர்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டின் முதல்வராக விஜயை அமர்த்த வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தினர் சபதம் எடுத்துள்ளனர். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதி குறித்து தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி நடிகர் விஜய் மதுரையில் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது. அந்த தொகுதியில் திமுக கட்சியின் வேட்பாளராக அமைச்சர் மூர்த்தி களம் காண்பார். அவருக்கு எதிராக விஜய் போட்டு இட போவதாகவும் தென் மாவட்டத்தில் தன் செல்வாக்கை நிரூபிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது மதுரை வடக்கு மாவட்ட சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் விஜய் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனை தளபதி ரசிகர்களும் கட்சி நிர்வாகிகளும் வைரல் ஆக்கி வருகிறார்கள். மேலும் அமைச்சர் மூர்த்திக்கு டப் கொடுக்கும் வகையில் மதுரை வடக்கு தொகுதியில் தளபதி களம் காண போகிறார் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.