
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி திராவிட மாடல அரசின் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற ரோல் மாடலாக செயல்படும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு.
நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் 1244 கூட்டங்கள் நடைபெறும் என்று தீர்மானம்.
2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் யார் வேட்பாளர் என்பதை கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். அவரை சட்டமன்றத்திற்கு தகுதி உள்ளவராக உழைக்க செய்வது உங்கள் கடமை என்று தீர்மானம்.
கடந்த 7 ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றிக்கு காரணம் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் தான்.
அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிட அதிக நேரம் அவர்களுடைய மாவட்டங்களில் செயல்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சமீப காலமாக அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கும் நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் இளம் வேட்பாளர்களை நியமிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜூன் 1ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.