நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை துவங்கி, கடந்த மாதம் விக்கரவாண்டியில் முதல் அரசியல் மாநாட்டை நடத்தியது அனைவராலும் கவனிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற நிலையில், விஜய் தனது முதற்கட்ட அரசியல் உரையை ஆவேசமாக வழங்கினார்.

அவரது பேச்சில் திராவிட அரசியல், இருமொழி கொள்கை உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை அவருக்கே உரிய பாணியில் உரைத்தது, தமிழகத்தின் முழு கவனத்தையும் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, விஜய் கடந்த 3-ந்தேதி சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு, விஜய் தனது 69-வது படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் தலைமையில் இயங்கும் தேர்தல் வியூக நிறுவனத்துடன், தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.