அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கத்தில் நிர்வாகிகள் பணி செய்து வருகிறார்கள். அதன் பிறகு விஜய் கட்சி மாநாட்டிற்கு செல்வீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கட்சி தொடங்குவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது.
அதிமுக ஒரு மிகப்பெரிய இயக்கம். எங்களுடன் கூட்டணி வைக்காதவர்களே கிடையாது. ஆட்சியைப் பிடிப்பதற்கான வியூகத்தை எடப்பாடி பழனிச்சாமி வகுத்து வருகிறார். விஜயுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் நடிகர் விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து அதிமுக கட்சியினர் அவரை வாழ்த்தி வரவேற்று வருகிறார்கள். பாஜக மற்றும் திமுகவை சேர்ந்தவர்கள் விஜய்யை விமர்சித்தாலும் அதிமுகவினர் விமர்சிக்கவில்லை. இதன் மூலம் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்புகள் சட்டமன்ற தேர்தலை ஒட்டி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது