2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக டிடிவி தினகரன் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: “மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்தி, மக்களுக்கான ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி வழங்கும். அதற்கான வியூகம் தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிக்கின்றது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே இடம் பெறுவோம்.” என கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. சசிகலா, அதிமுகவில் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக அறிவித்தார். அவர் மேலும், “தன்னை ஒருங்கிணைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவேன்” என்றும் உறுதியளித்துள்ளார்.