நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இன்று செய்தியாளர்கள் விஜய் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு சீமான் கலகலப்பாக பதிலளித்தார். தவெக மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு வந்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு, “செல்வேன். அண்ணனும் தம்பியும் சேரக்கூடாது என்றுதான் நினைக்கிறார்கள்” என்றார். 2026இல் விஜய்யுடன் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “I am Waiting” என்று புன்னகைத்தார் சீமான்.