அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் வாக்குறுதியின் படி 2023 -24ஆம் நிதியாண்டில் மட்டுமே வேலைவாய்ப்பு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்காக ரூ.935.22 கோடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.5.5 லட்சம் கோடி ஆக உயரும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் வருகின்ற மே மாதத்திற்குள் அசாமை சேர்ந்த 40,000 இளைஞர்களுக்கு அரசு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். குறுந்தொழில் செய்து கொண்டிருக்கும் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் எந்த வருடத்தில் மட்டுமே ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.