அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71-ஆவது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 2023-ன் பிரபஞ்ச அழகி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில்  பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்கோனி கேப்ரியல் என்பவர் வென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வெனிசுலாவின் டயானா சில்வா 2-வது இடத்தையும், டொமெனிகன் குடியரசின் அமி பெனா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். அதேபோல் இந்தியா சார்பாக  இந்த போட்டியில் போட்டியிட்ட திவிதா சோன் சிரியா உடையணிந்து வந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் அவர் 16 -வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.