2023 உலக கோப்பை அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், இன்று 3 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது..

ஐசிசி கிரிக்கெட் 13வது ஒருநாள் உலகக் கோப்பைக்கு இப்போது ஒரு வாரம் மட்டுமே உள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி முதல் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் உலக கோப்பை தொடங்குகிறது. இதற்கு முன், அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தின் மூலம் தங்களை சோதிக்கும். உலகக் கோப்பையை எதிர்கொள்ளும் முன், இன்று வெள்ளிக்கிழமை (செப்.,29) முதல் பயிற்சி ஆட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

திருவனந்தபுரம், ஹைதராபாத் மற்றும் கவுகாத்தி ஆகிய 3 மைதானங்களில் இன்று தொடங்கி அக்டோபர் 3ஆம் தேதி வரை பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும்.  7 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பாபர் அசாம் மற்றும் அணியினர் இன்று நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கின்றனர். எனவே அவர்கள் 7 ஆண்டுகளுக்கு பின் இன்று இந்திய மண்ணில் களமிறங்கி ஆடுவார்கள்.

இந்தப் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்கதேசத்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி நியூசிலாந்து அணி சமீபத்தில் இந்தியா வந்தடைந்தது. ஆசிய கோப்பையில் தோள்பட்டையில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் மீது பாகிஸ்தான் அணியின் பார்வை உள்ளது. உலகக் கோப்பையில் அவர் விளையாடுவது குறித்து இன்னும் சந்தேகம் உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஹாரிஸ் விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும், அவர் நேற்று பயிற்சி அமர்வில் பங்கேற்றார். நியூசிலாந்து அணி கடந்த 2019 உலக கோப்பையில் ரன்னர்-அப் என்பதை மறந்துவிட முடியாது. வில்லியம்சனின் அணி இந்த ஆண்டு 20 போட்டிகளில் 11ல் தோல்வியடைந்து 8ல் வென்றுள்ளது. கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுத்தி இன்னும் காயத்திலிருந்து மீண்டு வருகின்றனர். இன்றைய போட்டியில் களமிறங்குவார்களா என்பது சந்தேகம்.

அதேபோல இன்று இலங்கை மற்றும் வங்கதேசம், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இந்த 3 போட்டிகளுமே 2 மணிக்கு தொடங்கும். வார்ம்-அப் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் 2 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும் உலகக் கோப்பை 2023 வார்ம்-அப் போட்டிகளின் நேரடி ஸ்ட்ரீமிங் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் பார்க்கலாம். இருப்பினும், ஒரே நேரத்தில் பல போட்டிகள் நடக்கும் என்பதால் எந்த போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என்பதை உறுதிப்படுத்த முடியாது.

பயிற்சி ஆட்டங்களின் அட்டவணை :

செப்டம்பர் 29, 2023 – வெள்ளிக்கிழமை (3 போட்டிகள்)

பங்களாதேஷ் Vs இலங்கை, பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி

தென்னாப்பிரிக்கா Vs ஆப்கானிஸ்தான், கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்

நியூசிலாந்து Vs பாகிஸ்தான், ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்

செப்டம்பர் 30, 2023 – சனிக்கிழமை :

இந்தியா vs இங்கிலாந்து, பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி

ஆஸ்திரேலியா Vs நெதர்லாந்து, கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்

அக்டோபர் 2, 2023 – திங்கட்கிழமை :

இங்கிலாந்து Vs பங்களாதேஷ், பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி

நியூசிலாந்து Vs தென்னாப்பிரிக்கா, கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்

அக்டோபர் 3, 2023 – செவ்வாய்க் கிழமை :

ஆப்கானிஸ்தான் Vs இலங்கை, பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி

இந்தியா Vs நெதர்லாந்து, கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்

பாகிஸ்தான் Vs ஆஸ்திரேலியா, ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்

பயிற்சி ஆட்டங்களின் நேரம் :

மதியம் 2 மணி முதல் அனைத்து பயிற்சி ஆட்டங்களும் நடைபெறும்.

2023  ஒருநாள் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி :

கேன் வில்லியம்சன் (கே), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்ச் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, வில் யங்.

2023  ஒருநாள் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி :

பாபர் அசாம் (கே), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம்.

2023  ஒருநாள் உலகக் கோப்பைக்கான இலங்கை அணி :

தசுன் ஷானகா (கே), குசல் மெண்டிஸ் (து.கே), குசல் பெரேரா, பதும் நிஷாங்கா, திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமந்த, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, கசுன் ராஜித, மதீஷ பத்திரனா, லஹிரு குமாரா, டில்ஷான் மதுஷங்கா.

காத்திருப்பு வீரர் : சாமிக்க கருணாரத்ன

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி :

ஷாகிப் அல் ஹசன் (கே), லிட்டன் குமர் தாஸ், தன்சித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (து.கே), தவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா ரியாத், மெஹிதி ஹசன் மிராஸ், நசும் அகமது, ஷக் மஹேதி ஹசன்,
தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்.

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி :

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, இக்ராம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன் உல் ஹக்.

2023  ஒருநாள் உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி :

டெம்பா பவுமா (கே), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென், லிசாட் வில்லியம்ஸ்.