அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வைத்து நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. உலகக்கோப்பை முழுவதிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இறுதி ஆட்டத்தை வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்பது ஒட்டுமொத்த நாட்டையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் X வலைதள பக்கத்தில் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இந்திய அணியின் இளம் ரசிகர் ஒருவர் இந்திய அணி தோல்வியுற்றதும் கண்ணீருடன் தனது தாயிடம் வந்து அழும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த காணொளி ஆனது தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.