நடப்பு ஆண்டில் அதானி, முகேஷ் அம்பானி, ராதாகிஷன் தமனி ஆகிய பில்லியனர்களின் சொத்து மதிப்பு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹிண்டன் பர்க் அறிக்கை எதிரொலியால் கௌதம் அதானி சொத்து மதிப்பில் இதுவரை 80.60 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் உலக டாப் 500 பணக்காரர்களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவராக கௌதம் அதானி உருவெடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து கௌதம் அதானி தனது மொத்த சொத்து மதிப்பில் நான்கில் மூன்று பங்கு குறைந்துள்ளது.

அடுத்தபடியாக ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி 5.38 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் பங்குகள் 7.35 சதவீதம் சரிவை கண்டுள்ளன. இதை அடுத்து அவென்யூ சூப்பர் மார்க் உரிமையாளர் ராதாகிஷன் தமனி தனது சொத்து மதிப்பில் 2.67 பில்லியன் டாலரை இழந்து பெரும் இழப்பை சந்தித்துள்ளார். ராதாகிஷன் தமனி அவென்யூ சூப்பர் மார்க்-இன் பங்குகள் இந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வரையிலான காலத்திற்கு 14 சதவீதம் சரிந்துள்ளது.