பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் ஆட்குறைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அடுத்து என்ன செய்வது? எங்க வேலை தேடுவது? என்ற மன உளைச்சல் ஏற்பட்டு வரும் நிலையில் மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக சொல்லியும் இந்த இடத்தில் விண்ணப்பிக்க ஆள் இல்லையாம். ஸ்காட்லாந்தில் உள்ள அவெர்டின் கடற்கரைக்கு அருகே வடக்கு கடலில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் வேலைக்காக ஆள் தேவை என்ற அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டுள்ளன.

கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த பெரிய தொழிற்சாலையில் கிணறுகள் தோன்ற எண்ணை மற்றும் எரிவாயுவை பிரித்தெடுக்க மற்றும் சுத்திகரிக்க வேண்டும். அதன் பிறகு அந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை நிலத்துக்கு கொண்டு வந்து சேமிக்க வேண்டும். இந்த வேலைக்காக தான் ஆட்களை எடுக்கிறார்கள். இந்த பணிக்காக பணியமர்த்தப்படும் நபர்கள் தினமும் 36 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியத்துடன் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் ஆறு மாத ஷிப்ட்டுகள் வேலை செய்தால் அவர்களுக்கு ஒரு கோடி வரை சம்பளம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இரண்டு வருடத்தில் ஒரு வருடம் தான் கடலில் வேலை செய்யும் நாட்கள். அதில் ஒரு கோடி சம்பாதிக்கலாம் என்றால் பெரிது தானே..! இந்த சம்பளத்தோடு மாதத்திற்கு ஒரு முறை ஒரு வாரம் வரை விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அது உடல்நலம் சரியில்லாத காரணத்திற்காக வழங்கப்படுகிறது. நல்ல சம்பளம் லீவ் வேறு, வருடத்திற்கு ஆறு மாதம் வேலை, ஆறு மாதம் விடுமுறை எல்லாம் சொல்றாங்களே நாமும் விண்ணப்பிக்கலாமா? என்று தானே நினைக்கிறீர்கள். ஆனால் இந்த வேளையில் அனைவரும் சேர்ந்து விட முடியாது. அதற்கு தனி தகுதிகள் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் அடிப்படை கடல்சார் பாதுகாப்பு மற்றும் அவசர பயிற்சி கடல் சார் அவசர பயிற்சி உள்ளிட்ட சில அடிப்படை பயிற்சிகளை முடித்திருக்க வேண்டும். அதேபோல மருத்துவ பயிற்சியுடன் தொழில்நுட்ப பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகியும் 5 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளது. அதற்கு காரணம் கடலுக்குள் வேலை, தனியாக வேலை செய்ய வேண்டும், ரிஸ்க் அதிகம் என்பதால் தான். வேலையில்லா திண்டாட்டம் இருந்து வந்த போதிலும் உயிரை பனையம் வைத்து இந்த வேலைக்கு போக வேண்டுமா என்று இந்த வேலைக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பம் போட்ட ஐந்து பேருமே வேலையில் சேர்வார்களா என்ற சந்தேகம் நிறுவனத்திற்கே உள்ளதாம்.