
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக சுப்மன் கில்லுக்கு யுவராஜ் சிங் அறிவுரை வழங்கியதாக தெரிவித்துள்ளார்..
2023 உலக கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் நாளை அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. ஏற்கனவே இரு அணிகளும் தலா 2-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளன. போட்டியை நடத்தும் இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது, அதே நேரத்தில் பாகிஸ்தான் நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்து இந்தியாவை எதிர்கொள்ள தயாராக உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வென்றதில்லை. எனவே, டீம் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும். ஆனால், போட்டியின் தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு சுப்மன் கில் வடிவில் பெரிய அடி விழுந்தது.

இதற்கிடையில், டெங்குவால் பாதிக்கப்பட்ட கில் முதல் 2 போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் நாளைய போட்டியில் விளையாடுவாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து அகமதாபாத் திரும்பிய கில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வலைப்பயிற்சியில் பயிற்சியில் ஈடுபடுவதை காணமுடிந்தது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், இளம் வீரருக்கு மதிப்புமிக்க அறிவுரை வழங்கியுள்ளார்.
யுவராஜ் சிங் கில்லுடன் பேசிய விஷயங்களைப் பற்றிப் பேசினார். ANI இடம் யுவராஜ் பேசுகையில்.. நான் சுப்மன் கில்லை உறுதியாகக் கட்டமைத்துள்ளேன். 2011 உலகக் கோப்பையில் நான் எப்படி டெங்கு மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடினேன் என்பதைச் சொல்லி கில்லை ஊக்கப்படுத்தினேன். டெங்கு, புற்று நோய் வந்தாலும் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியிருக்கிறேன் என்று சொன்னேன்.
எனது நிலை என்னவாக இருந்தாலும் அணியில் சேர நான் எப்போதும் தயாராகவே இருந்தேன். கில்லுக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீள்வது எளிதான காரியமாக இருக்கவில்லை. ஆனால் கில் குணமடைந்து வலைகளில் நிறைய பயிற்சி செய்தார். நான் மகிழ்ச்சி கொள்கிறேன். எனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் முழுமையாக குணமடைவார் என நம்புகிறோம்.” என்று கூறினார்.
24 வயதான கில் இந்த ஆண்டு ஐபிஎல் மற்றும் ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவராக உள்ளார். இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்ததோடு, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையையும் கில் படைத்துள்ளார். உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் கில் விளையாடுவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. அவர் நேற்று அகமதாபாத் வலைகளில் ஒரு மணி நேரம் பயிற்சி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மெகா போட்டிக்கான போட்டியில் கில் குணமடைந்து விளையாடுவாரா, இல்லையேல் அதிக ஓய்வு என்ற பெயரில் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Yuvraj Singh said, "I've solidly built Shubman Gill. I've told him that I've played matches dengue and the World Cup with cancer. Hopefully he'll be perfectly fine for the match against Pakistan". (ANI). pic.twitter.com/Q5KqGW9Mdv
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 13, 2023