
அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வில் கிங் கோலி தொடர்பான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இந்திய அணியின் நட்சத்திர வீரரான இவர் கிரிக்கெட் ரசிகர்களால் உலகளவில் நேசிக்கப்படுகிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்துள்ளார் கிங் கோலி. அவர் நவீன கால விளையாட்டின் எல்லா காலத்திலும் (GOAT) சிறந்த வீரராக கருதப்படுகிறார். மிகச்சிறந்த வீரரான கோலி 2008 ஆகஸ்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகி தனது சர்வதேச வாழ்க்கையைத் தொடங்கினார். அதே ஆண்டில் அவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல் ) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியால் வாங்கப்பட்டார்.
இதனிடையே அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வு (AILET) 2024 தேர்வு இன்று நாட்டின் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று ஐபிஎல் தொடர்பானது. கேள்வி :“இந்தியன் பிரீமியர் லீக் ஒரு தொழில்முறை டி20 கிரிக்கெட் லீக் ஆகும். இது 2008 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் லீக்களில் ஒன்றாக மாறியுள்ளது. தொடக்க சீசனிலிருந்து பின்வரும் எந்த வீரர் ஒரே அணிக்காக விளையாடியுள்ளார்?” என கேட்கப்பட்டது.
கொடுக்கப்பட்ட சாய்ஸ் :
A . டேவிட் வார்னர், B. விராட் கோலி, C. பென் ஸ்டோக்ஸ், D. ஹர்திக் பாண்டியா
மேலே உள்ள கேள்விக்கு சரியான பதில் விராட் கோலி, ஏனெனில் அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஒற்றை உரிமையான அதாவது ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஒரே வீரர் ஆவார்.
ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் சாதனை :
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக கோலி 237 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 37.25 சராசரியுடன் 7263 ரன்கள் எடுத்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆர்சிபிக்காக 7 சதங்களையும் அடித்துள்ளார். இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்காக விராட் அற்புதமான ஸ்கோரையும் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 8,676 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 13,848 ரன்களும், டி-20 போட்டிகளில் 4008 ரன்களும் எடுத்துள்ளார். நட்சத்திர வீரர் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 80 சதங்களையும், இதில் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மட்டும் 50 சதங்களையும் அடித்துள்ளார்.
A question related to King Kohli in AILET examination. pic.twitter.com/Jl1lDITasR
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 10, 2023