சமூக வலைத்தளங்களில் திமுக தொண்டர்களை “200 ரூபாய் ஊபிகள்” என்று தொடர்ந்து எதிர்க்கட்சியினரும், விமர்சகர்களும் கிண்டல் செய்து வரும் நிலையில், அதற்கு “ஜென்சி டிஎம்கே மீட் அப்” (Genz DMK Meet up) நிகழ்ச்சியில் திமுக இளைஞர் ஒருவர் கொடுத்த அதிரடி பதிலடி வீடியோ தற்போதையை ட்ரெண்டிங் டாபிக்காக மாறியுள்ளது. மேடையில் ஆக்ரோஷமாகப் பேசிய அந்த இளைஞர், “எங்களுடைய அக்கவுண்ட்டில் 200 ரூபாய் விழுகிறது என்றும், நாங்கள் 200 ரூபாய்க்காகப் பேசுகிறோம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் யாரும் 200 ரூபாய்க்காக இங்கே நிற்கவில்லை.

எங்களை டாக்டராக, இன்ஜினியராக மாற்றி, இன்று யுகே (UK) போன்ற வெளிநாடுகளில் 2 லட்சம், 3 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் அளவிற்கு உயர்த்தியது இந்த கழகம்தான்” என்று பெருமையுடன் முழங்கியுள்ளார். ​மேலும், “நாங்கள் 200 ரூபாய்க்காகப் பேசவில்லை, நாங்கள் சம்பாதிக்கிற ஒவ்வொரு காசிலும், நாங்கள் சாப்பிடுகிற ஒவ்வொரு ரூபாய் சாப்பாட்டிலும் ஏதோ ஒரு விதத்தில் இந்த கழகத்துடைய (திமுக) உதவி இருக்கிறது.

அந்த நன்றிக்காகத்தான், அந்த உதவிக்காகத்தான் இன்று இவ்வளவு இளைஞர்கள் திரண்டு நிற்கிறோம்” என்று நெகிழ்ச்சியுடனும் ஆவேசத்துடனும் பேசியுள்ளார். வம்புக்கு இழுத்த விமர்சகர்களுக்கு, தங்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதாரமாக வைத்து அந்த இளைஞர் கொடுத்த இந்த ‘நெத்தியடி’ பதிலடி பேச்சு, தற்போது உடன்பிறப்புகளால் சோஷியல் மீடியாவில் பயங்கர வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.