
ராஜஸ்தானில் மக்களுக்கு மாதம் தோறும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் உடன் ராஜஸ்தானில் சில தினங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கி வரும் நிலையில் தற்போது மாதந்தோறும் மக்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்றும் 200 யூனிட் பயன்படுத்தினால் 100 யூனிட்டுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.