
அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் 211 பேருடன் உறவு கொண்டதாக பாலியல் தொழிலாளி வாக்குமூலம் அளித்துள்ளார். லிண்டா என்ற பெயர் கொண்ட அவருக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதியானது. அதனை பொருட்படுத்தாமல் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான 5 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார். வருமான நோக்கில் தனது பாலியல் சேவையை தொடர்ந்து இருக்கிறார்.
தன்னை நாடி வந்தவர்களுக்கு எல்லாம் எச்ஐவி பரப்பியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 200 பேர் மூலமாக பல்லாயிரம் பேருக்கு வைரஸ் பரவி இருக்கலாம் என்று காவல்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்துள்ள போலீசார் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.