
கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவி ரெட்டி என்பவர் தனது குடும்பத்தினருடன் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு காரில் சுற்றுலா வந்தார். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு கேரள மாநிலத்தில் உள்ள மூணார் பகுதியிலிருந்து சஞ்சீவி ரெட்டி, சிறுவர்கள் உட்பட 7 பேர் தமிழகம் வந்து அங்கிருந்து ஊருக்கு செல்ல புறப்பட்டனர். இந்நிலையில் கனிம வளம் ஏற்றி சென்ற டிப்பர் லாரிகள் அந்த வழியாக சென்றது. அப்போது வளைவில் திரும்ப முயன்ற போது லாரி மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் காரை திருப்பி உள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாரதமாக 200 அடி பள்ளத்தில் விழுந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துல் சிக்கிய 7 பேரையும் மீட்டனர். அதில் சஞ்சீவி ரெட்டி மட்டும் பரிதாபமாக இறந்து விட்டார். அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.