திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 2-ம் தேதி மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

இந்நிலையில் மேகாலயா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 200 யூனிட் இலவச மின்சாரம், ஆண்டுக்கு 6 சமையல் கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே வாக்குறுதி அளித்துள்ளார். வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு, இலவச மருத்துவம், 12ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். வரும் 27ம் தேதி மேகாலயாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் வாக்குறுதியை அளித்து வருகிறது.