தமிழ் திரையுலகில் முன்னணி நச்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் இதுவரை 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். அதே நேரம் காமெடி நடிகர் வடிவேலுடன் அஜித் இறுதியாக 2002ம் வருடம் ரிலீஸ் ஆன ராஜா படத்தில் நடித்தார்.

இவர்கள் இருவருக்குமான நகைச்சுவை காட்சிகள் படத்தில் வேறொரு லெவலுக்கு சென்றது. இதையடுத்து இன்று வரை இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ராஜா திரைப்படத்துக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் 20 ஆண்டுகளாக வடிவேலுவை அஜித் தன்னுடைய படத்தில் நடிக்க வைக்கவில்லை என சொல்லப்படுகிறது.