தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் கமல்ஹாசன். இவர் நடிப்பதோடு மட்டுமின்றி திரைக்கதை, இயக்கம் , பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஆவார். மேலும் இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் வாயிலாக கமல்ஹாசன் பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார்.

கடந்த வருடம் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகிய “விக்ரம்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது. அதாவது நடிகர் சிம்புவின் 48வது படத்தை கமலஹாசன் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.