விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வடநெற்குணம் கிராமத்தில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் இருக்கிறது. இங்கு அதே பகுதியில் வசிக்கும் உஷா, வள்ளியம்மாள், ஆனந்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மணிலா விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அருகே இருந்த மரத்திலிருந்து திடீரென வந்த தேனீக்கள் பெண்களை துரத்தி துரத்தி கொட்டியது.

இதனால் வலி தாங்க முடியாமல் பெண்கள் அலறியடித்து கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். இந்நிலையில் தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.