குஜராத் மாநிலத்தில் பிரபல எஸ்கே நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வைரம் தயாரிக்கப்படுகிறது. இங்குள்ள கைவினைஞர்கள் தற்போது பிரதமர் மோடியின் உருவத்தை வைரத்தில் செதுக்கியுள்ளனர். அதாவது 8 கேரட் வைரத்தில் பிரதமர் மோடியின் உருவத்தை அழகாக வரைந்துள்ளனர். இது 40 கேரட் லெப்ரான் வைரமாகும்.

இருப்பினும் இது வடிவத்திற்காக வெட்டப்பட்டு 8 காரட்டாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வைரம் மேக் இன் இந்தியா பாணியில் உருவாக்கப்பட்டது என்பதால் அது சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாகும். இதனை சுமார் 20 கைவினைஞர்கள் சேர்ந்து ஒரு மாத காலமாக வடிவமைத்துள்ளனர். மேலும் இதனை கண்காட்சியில் வைத்துள்ள நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.