சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணியில் தயாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆவார் இந்நிலையில் பட்டாபிராம் பாரதியார் நகரைச் சேர்ந்த சிவராஜ் லோகநாதன் ஆகியோர் தயாநிதிக்கு சொந்தமாக மாங்காடு ஸ்ரீ சக்கரா நகரில் இருக்கும் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் வீடு கட்டி தருகிறோம் என கூறியுள்ளனர். மேலும் லாபத்தில் உங்களுக்கு 40 சதவீதமும், எங்களுக்கு 60 சதவீதமும் எடுத்துக் கொள்ளலாம் என அவர்கள் கூறியதை நம்பி தயாநிதி சம்மதம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து லோகநாதனும், சிவராஜம் தயாநிதிக்கு தெரியாமல் அந்த நிலத்தை பலருக்கு விற்பனை செய்வதாக கூறி 1 கோடியே 45 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளனர். பின்னர் கூறியபடி தயாநிதிக்கு லாபத்தில் பங்குதாராமல் ஏமாற்றி விட்டனர். இதுகுறித்து தயாநிதி ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லோகநாதன், சிவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.