டெல்லியில் உள்ள நங்லோய் பகுதியில் காரில், 2 பேர் அமர்ந்திருந்து மதுபானம் குடித்துக் கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக வந்த கான்ஸ்டபிள் சந்தீப் மாலிக் என்பவர் பார்த்து கண்டித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் போதையில் சந்தீப்பின் பைக் மீது காரை ஏற்றி, 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பைக்கை காருடன் இழுத்து சென்றனர். இதில் சந்தீப்புக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சக காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், நீதிமன்றத்தில் 400 பக்க குற்ற பத்திரிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அதன்படி தர்மேந்தர்(39), ரஜ்னீஷ்(25) என 2 குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர ஜிதேந்தர் மற்றும் மனோஜ் சேர்மேன் 2 பெயரும் குற்றப்பத்திரிக்காயில் இடம் பெற்றுள்ளது. மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு சந்தீப்பின் நன்றாக தெரியும் என்று அவர்கள் வசித்த பகுதியிலேயே 2 பேரும் வசித்து வந்தனர் என்றும் விசாரணையின் முடிவில் தெரியவந்துள்ளது.