
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரசி, மலிவான விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் சுமார் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகிறது. மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் 2.50 கோடி பேர் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கு தகுதி இல்லாதவர்கள் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு நடத்திய கணக்கெடுப்பின்படி, வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்ட பலருமே ரேஷன் பொருள்களை பெறுவதாகவும், அவர்களுக்கு வழங்கப்படும் பொருள்கள் விரைவில் நிறுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.