
சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவில் திலீப் சிங்(45) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பார்வதி தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரது இரண்டாவது மனைவி நேபாளத்தில் வசித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக பார்வதி வீட்டில் தனி அறையில் இரண்டாவது மனைவி வசித்து வந்தார். இந்த நிலையில் பார்வதிக்கும் திலீப்புக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டாம் தேதி 2-வது மனைவி தயாரித்த உணவை சாப்பிடுமாறு திலீப் பார்வதியிடம் கூறினார். அதற்கு பார்வதி மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த திலீப் கல் மற்றும் கத்தியால் பார்வதியை தாங்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பார்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திலீப் சிங்கை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.