புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் மணிகண்டன் என்ற விக்கி ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்த நிலையில் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அசோக், கார்த்தி, ஸ்ரீகாந்த் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், விக்கியுடன் நாங்கள் நண்பர்களாக இருந்தோம். விக்கியின் உறவினர் துக்க நிகழ்வில் மது அருந்தினோம். அப்போது இரண்டு பீருக்கே உடனே ஏறிடுச்சே, நீ எல்லாம் என்ன ஜிம் மாஸ்டரா என விக்கியிடம் கேட்டதற்கு எங்களை அடித்தான். அதில் கோபமடைந்து கற்களால் அவனை அடித்து கொன்றோம் என கூறியுள்ளனர்.