தமிழக காங்கிரஸ் கட்சியின் முற்றுகை போராட்டம் குறித்து கிண்டலடிக்கும் விதமாக போராட்டத்திற்கு வரும் 10 காங்கிரஸாருக்கு உணவு ஏற்பாடு செய்வோம் என்று பாஜக மாநில அண்ணாமலை அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டது வைரலானது. இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “முற்றுகை போராட்டத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு அறிவிக்கிறோம், கமலாலயத்தில் மாட்டிறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுடன் தயாராக இருங்கள் அண்ணாமலை” என்றார்.