
சென்னை போரூரில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறிய நிலையில் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதில் பிரகாஷ் அந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதி கொடுத்த நிலையில் 2 லட்ச ரூபாய் வரையில் பணம் வாங்கியுள்ளார்.
இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்த நிலையில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி திடீரென பிரகாஷ் தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட அந்த இளம்பெண் மனம் உடைந்து நிலையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் ஈடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துவிட்டார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.