திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகள் தங்களுடைய ஏழு மாத குழந்தையுடன் இரண்டு வருடங்களுக்கு மேலாக பொது கழிப்பறையில் வசித்து வரும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு கட்டித் தந்த பொது கழிவறை கட்டிடத்தில் குடியேறிய இவர்கள் அப்போது முதல் அங்கு தான் வசித்து வருகின்றனர். குளியலறையை படுக்கை அறையாகவும் கழிவறையை பொருட்கள் வைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் வீடு ஒதுக்க வேண்டும் என்று தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.