இந்தி பட உலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால்பதித்து வருகின்றனர். அதன்படி பிரபல நடிகர் சல்மான்கானும் தற்போது மும்பையில் ஓட்டல் கட்ட திட்டமிட்டு உள்ளார். மும்பையில் கடற்கரையை ஒட்டியுள்ள பாந்த்ரா பகுதியில் சல்மான்கானுக்கு வீடுகள் இருக்கிறது. இங்கு குடியிருப்புகள் கட்ட போவதாக அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில் அங்கு குடியிருப்புகளுக்கு பதில் பிரமாண்ட ஓட்டல் கட்ட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. 19 மாடிகளுடன் இந்த ஓட்டல் அமையவுள்ளது. இவற்றில் தங்கும் அறைகள், உணவகம், நீச்சல்குளம், உடற்பயிற்சி கூடம் என அனைத்து அம்சங்களும் இடம்பெற இருக்கிறது. இந்த ஓட்டலானது சல்மான்கானின் தாய் பெயரில் அமையயிருக்கிறது. இதற்குரிய அனுமதி கேட்டு சல்மான் தரப்பில் மும்பை மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.