ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி,  எடப்பாடி பழனிச்சாமி அவர்களே… நான் எனது உரையை முடிப்பதற்கு முன்னால் சொல்லுகிறேன். உங்களை காப்பாற்றுவது வேறு யாரும் அல்ல, உங்களை காப்பாற்றுவது யாரும் அல்ல எனக்கு தெரியும். இந்த நாட்டை ஆளுகின்ற முதலமைச்சர் மாண்புமிகு நான் மதிக்கின்ற ஸ்டாலின் அவர்களும், அவரது அரசும் தான் உங்களை பாதுகாத்து வைத்திருக்கிறது.

எனக்கு தெரியும். டிவிஎஸ்சியில் போய் கேஸ் போட்டு ஆறு மாசத்ல காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை நாம்  பெற்றோம்.  ஒரு வழக்கில் கூட கைது செய்யப்படுவதில்லை. கொடநாடு கொலை வழக்கிலே 18 பேரை விசாரிக்க வேண்டும்.   17 பேரே விசாரணைக்கப்பட்டு இருக்கிறார்கள். சிறையிலேயே இருந்து வந்த சின்னம்மா அவர்களையும் காவல்துறை வீட்டிலே போய் விசாரித்தது.

நீங்கள் நினைத்துப் பாருங்கள் உண்டா? ஆகவே, இந்த அரசு ஏன் மெத்தனம் காட்டுகிறது என்பது தான் எங்களது கேள்வி, தேர்தல் நேரத்தில் சொன்னார் தமிழக முதல்வர் அவர்கள்….  உடனடியாக நடவடிக்கை எடுப்போம். ஆனால், உங்களது அமைச்சர் சிறையிலே இருக்கிறார்கள். பொன்முடி சிறைக்குப் போகிறார். மூணு, ஆறு என  ஒன்பது வருஷம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தால், இவர்கள் தேர்தலிலே நிற்க முடியாது.

ஏற்கனவே, ஒருத்தர் உள்ளே போயிருக்காரு செந்தில் பாலாஜி…..  கண்டா வர சொல்லுங்க என அவர் காணாம போயிட்டார். ஆட்சி அதிகாரம் என்பது,  உங்களை நீங்களே ஜெயிலுக்கு அனுப்பி கொள்வதா? பழனிச்சாமியை விசாரிக்க முடியாதா? உங்கள் மீது தனிப்பட்ட கோபம் எங்களுக்கு இல்லை. ஒரு நியாயமான விசாரணை இல்லை. இதை நீங்கள் வேடிக்கைப்பார்கிறீர்கள். நாங்கள் இப்போழுது சொல்லுகிறோம். இதைத்தான் நாங்கள் தேர்தலிலே முன் வைப்போம்.  மக்களிடத்திலே கேட்போம்.  இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சொல்லுவோம் என தெரிவித்தார்