
உத்திரபிரதேச மாநிலத்தின் நிகாசன் கோட்வாலி பகுதியில் உள்ள சக்ரா கிராமத்தில், குடும்பத்தையே சீரழித்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது விவசாயியான குர்னம் சிங் என்பவர் ராஜ்விந்தர் என்ற பெண்ணை 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆனால் சமீபத்தில், ராஜ்விந்தர் தனது கணவனின் மாமாவின் மகன் சத்னம் சிங்குடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். சத்னமும் ஏற்கனவே திருமணமாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து அறிந்த குர்னம், அதை எதிர்த்து சண்டையிட்ட நிலையில், ராஜ்விந்தர் மற்றும் சத்னம் இணைந்து அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜ்விந்தர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறையில் இருந்த பின்னர் ராஜ்விந்தர் குர்னமுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்த குர்னம், மே 26 ஆம் தேதி கிராமத்தில் ஒரு பஞ்சாயத்தை கூட்டி, தனது மனைவியை அவளுடைய காதலனாக கூறப்படும் சத்னத்திற்கு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து வைத்தார்.
लखीमपुर खीरी में हैरान कर देने वाला मामला: पत्नी से डरकर पति ने करवा दी उसकी शादी प्रेमी से!
लखीमपुर खीरी से सामने आया अजीबोगरीब मामला. तीन बच्चों की मां का पड़ोसी से चल रहा था प्रेम प्रसंग. पति को शक हुआ कि पत्नी जान ले सकती है, तो पंचायत बुलाकर प्रेमी से करवा दी उसकी शादी.… pic.twitter.com/3SNzhljpOo
— AajTak (@aajtak) May 28, 2025
திருமணத்திற்கு பின் ராஜ்விந்தர் தனது கணவரிடம் ஏற்பட்ட மனவேதனைகளை சொல்லியுள்ளார். “திருமணம் ஆனதிலிருந்து குர்னம் என்னை அடிப்பார். தினமும் சரிவர சாப்பாடு கூட போடமாட்டார். ஆனால் சத்னம் என்னை ஆதரித்தார்,” என்று கூறியுள்ளார். ஆனால் திருமணத்திற்கு பின் சத்னம், “ என் மனைவி என்னை விட்டுச் சென்றுவிட்டாள், இப்போது நான் அவதூறுக்கு உள்ளாகிறேன்,” எனக் கூறி ராஜ்விந்தருடன் வாழ மறுத்துவிட்டார்.
சத்னம் தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளின் அழுத்தத்தால், ராஜ்விந்தரிடமிருந்து பிரிவதாக கூறியுள்ளார். “அவளை தாய்வீட்டுக்கு அனுப்பிவைக்கிறேன். என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துத் தான் பிரிந்து வாழ விரும்புகிறேன்,” என தெரிவித்துள்ளார். இச்சம்பவம், சமூகத்தில் பெரும் விவாதத்துக்கும் அதிர்ச்சிக்கும் காரணமாகியுள்ளது. மேலும் இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.