
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் தற்போது வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவருக்கு 88 வயது ஆகும் நிலையில் தங்க கைகளைக் கொண்டவர் என்று போற்றப்படுகிறார். அதாவது இவருடைய ரத்தத்தில் Anti-D என்ற மிக அரிதான ஆன்ட்டிஜன் இருக்கிறது.
இது குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் HDFN என்ற ரத்த நோயை தடுக்க வல்லது. இதனால் இவர் தன்னுடைய 18 வயதிலிருந்து ரத்த தானம் செய்ய தொடங்கிய நிலையில் 81 வயது வரை ரத்த தானம் செய்தார். இதன் மூலம் இவர் 20 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். மேலும் இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.