
இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகத் திகழும் மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சி பயணம், நேற்று 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி, பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் கடந்த 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை, கடந்த 2013-ம் ஆண்டு சாம்பியன் டிராபி என 3 கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக மட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராகவும் பல ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட தோனி, அந்த அணியை பல முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல வைத்தார். தோனியின் கேப்டன்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தது.
தோனியின் கேப்டன்சியின் 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் தோனியின் கேப்டன்சி காலத்தில் நடந்த பல முக்கியமான தருணங்கள் இடம்பெற்றுள்ளன. தோனியின் இந்த சாதனைக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியாவை தோனி ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
The 𝐀𝐮𝐫𝐚 of Captain Cool, Since’0⃣7⃣ 🥳🦁#WhistlePodu #17YearsofCaptainCool pic.twitter.com/DLF9l5lzGN
— Chennai Super Kings (@ChennaiIPL) September 14, 2024