
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் 17 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோரை இழந்த நிலையில் தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வரவே அவரிடம் உறவினர்கள் விசாரணை நடத்தினர். அப்போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறினர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் படி உடுமலை மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ஜெய காளீஸ்வரன் (19), பவாபாரதி (22), நந்தகோபால் (19), பிரகாஷ் (24), பரணிக்குமார் (21), மதன்குமார் (19), 14 15 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள் உட்பட 9 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் போது சிறுமி 10-ம் வகுப்பு படித்து முடித்த நிலையில் குடும்பவறுமை காரணமாக வேலைக்கு செல்ல முடிவெடுத்து வேலை தேடி வந்துள்ளார். அந்த சமயத்தில் ரேஷன் கடையில் உதவியாளராக பணிபுரியும் 14 வயது சிறுவன் சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் சிறுவன் அழைத்த இடத்திற்கு எல்லாம் சிறுமி சென்றுள்ளார். அப்போது சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததோடு தன்னுடைய நண்பர்கள் 8 பேருக்கும் சிறுமியை விருந்தாக்கியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.