
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி வஞ்சி நகர் பகுதியில் அரசன் என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார்.
இந்நிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது அவருடைய பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.