
சென்னையில் இருந்து அமெரிக்கா செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சுமார் 17 நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள முன்னணி நிறுவனத் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.
ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி வரை சான் பிரான்சிஸ்கோவில் முன்னணி நிறுவன தலைவர்களை முதல்வர் சந்திக்கின்றார். பிறகு ஆகஸ்ட் 29ஆம் தேதி அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பிறகு சிகாகோ புறப்படுவார் என தெரிகிறது.