தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். சைலேஷ் குமார் தமிழக காவல்துறை வீட்டு வசதி வாரிய தலைவராகவும், தினகரன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஆகவும், செந்தில்குமார் கோவை மேற்கு மண்டல ஐஜி ஆகவும், ரூபேஷ் குமார் நெல்லை ஆணையராகவும், மகேந்திர குமார் சமூக நீதி மனித உரிமைகள் ஐஜியாகவும், சாமுண்டீஸ்வரி டிஜிபி அலுவலக ஐஜி என மொத்தம் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.