குஜராத் உள்பட 12 மாநிலங்களின் 94 தொகுதிகளுக்கு இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள 16 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதில் 11 பள்ளிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 16 பள்ளிகளின் வளாகத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அது போலி மிரட்டல் எனத் தெரியவந்தது.