பிரபல மலையாள நடிகர் தர்மஜன் போல்காட்டி கொச்சியை சேர்ந்த அனுஜா என்பவரை கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து வந்துள்ளார். பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டிலிருந்து வெளியேறி அனுஜாவை காதலித்து கரம் பிடித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதா, வைக்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர் தன்னுடைய மனைவி அனுஜாவோடு கொச்சி அருகே உள்ள கொங்கையர் பள்ளி மகாதேவர் கோவிலுக்கு வந்த நிலையில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

தங்களின் மகள்களின் விருப்பப்படி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள். இதனை அடுத்து அவர்கள் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.  பின்னர்  அங்கிருந்து புறப்பட்டு பள்ளி பதிவு அலுவலகத்தில் திருமண பதிவு செய்துள்ளார்கள்.