துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்குள்ள மக்கள் ஆரோக்கியத்தில் நீண்ட கால தாக்கம் இருந்ததாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தினால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் உலக சுகாதார மைய செய்தி தொடர்பாளர் மார்கெட் ஹாரிஸ் கூறுகையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தினால் அப்பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ளது. போதிய மருத்துவமனை மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணங்களால் அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள மக்கள் ஆரோக்கியத்தில் நீண்ட கால தாக்கம் இருக்கும் என்று உலக சுகாதார மையத்தின் செய்தி தொடர்பாளர் மார்கெட் ஹாரிஸ் கூறியுள்ளார்.