நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும், குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், மாட்டுக்கறி சாப்பிட்டால் பல நோய்கள் வரும், உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குறிப்புகளை தந்து சர்ச்சையில் சிக்கியவர் மருத்துவர் சர்மிகா. மருத்துவ டிப்ஸ் என்ற பெயரில் சித்தமருத்துவரான சர்மிகா youtube இல் கொடுத்து வந்த சில அறிவுரைகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. அவர் கூறிய இந்த அறிவுரைகளுக்கு பலரும் பதிலடி கொடுத்து வந்தார்கள்.

இந்த நிலையில் இது போன்ற போலியான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன் கூறியிருந்தார். இதனை அடுத்து  தவறான மருத்துவ அறிவுரைகளை வழங்கியதாக புகார் எழுந்ததால் சித்த மருத்துவர் ஷர்மிகா பதினைந்து நாட்களுக்குள் விளக்கம் அளிக்க இந்திய மருத்துவ த்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.