தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. இதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என செல்வப் பெருந்தகை கோரிக்கை வைத்தார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் ஆளுநர் விளையாடிக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார் செல்ல பெருந்தகை.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை, ஆளுநர் உரையை முழுமையாக படிக்கவில்லை. தமிழக அரசு எழுதிக் கொடுத்த ஆளுநர் உரையை ஆளுநர் ரவி முழுமையாக ஒரே படிக்கவில்லை. திராவிட மாடல்,  தமிழ்நாடு என்பதை விட்டுவிட்டு படிக்கிறார்  தமிழக ஆளுநர். வழக்கமாக அரசு எழுதிக் கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக படிப்பதை வழக்கம். வழக்கத்திற்கு மாறாக அரசின் உரையை முழுமையாக படிக்காத ஆளுநர் ரவியை கண்டிக்கின்றோம் என காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது.