
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு கோயம்புத்தூரில் இரண்டு நாட்களாக நடைபெற்ற நிலையில் அடுத்ததாக மதுரையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் ஜனநாயகன் படத்தின் சூட்டிங்குக்காக இன்று விஜய் மதுரை வருகிறார். இதற்காக இன்று மாலை நடிகர் விஜய் விமான நிலையத்திற்கு வரும் நிலையில் தற்போது காலை முதல் தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். ஏற்கனவே கோயம்புத்தூரிலும் நடிகர் விஜயின் வருகையை முன்னிட்டு தொண்டர்கள் காலை முதலே குவிந்தனர்.
அவரை காண ஆயிரகணக்கான தொண்டர்கள் குவிந்து வரும் நிலையில் இன்று மாலை மதுரை வரும்போது அதன் பிறகு ஷூட்டிங்கில் கலந்து கொள்வார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் மதுரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று மதுரைக்கு வரும் விஜய் அதன் பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாண்டி குப்பம் பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இன்று காலை முதலே தொண்டர்கள் குவிந்து வருவதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.