
சென்னை மாவட்டம் ஆவடி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தாத்தா பாட்டி வீட்டில் தங்கியிருந்து 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பொள்ளாச்சி சேர்ந்த சூர்யா(19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சூர்யா சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் சூர்யா பொள்ளாச்சியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்னைக்கு வந்துள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் நைசாக பேசி பொள்ளாச்சிக்கு அடுத்த செல்வதாக கூறி தாம்பரத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றார்.
தனது பேத்தி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த பாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது சிறுமியின் தாத்தாவின் போனுக்கு தாம்பரத்தில் இருக்கும் ஹோட்டலில் தங்க அறை எடுத்துள்ளதாக குறுந்தகவல் வந்தது.
தங்களது எண்ணை கொடுத்தால் பிரச்சனை வந்து விடுமா என நினைத்து சூர்யா சிறுமியின் தாத்தா நம்பரை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாத்தா போலீசாரிடம் கூறியுள்ளார். உடனே போலீசார் சிறுமியை மீட்டு போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.