உத்திரபிரதேசம் மாநிலத்தில் துப்பட்டா மற்றும் புடவையால் கழுத்தை இறுக்கி கடந்த 14 மாதங்களில் 9 பெண்களை கொலை செய்த குல்தீப் என்ற 35 வயது சீரியல் கொலைகாரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவருடைய மோசமான நடவடிக்கைகள் பிடிக்காமல் அவருடைய மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இதனால் பெண்கள் மீது கோபம் கொண்ட குள்தீப் பெண்களை கொலை செய்துவிட்டு அவர்களின் லிப்ஸ்டிக் மற்றும் பொட்டு போன்ற உடைமைகளில் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 14 மாதங்களில் மட்டும் ஒன்பது பெண்களை ஒரே மாதிரியான முறையில் கொலை செய்துள்ளார். தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.