பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை, நாளை மறுநாள் (13, 14ஆம் தேதி ) இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜனவரி 18ஆம் தேதி அதிகாலை 4 மணியில் இருந்து மெட்ரோ ரயில் சேவை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 18ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பதிலாக அதிகாலை 4 மணிக்கே மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்காக 5 நிமிட இடைவெளிகளில் 2 நாட்களும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர் செல்ல, சொந்த ஊரிலிருந்து திரும்ப ஏதுவாக மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.