
இந்தியாவைச் சேர்ந்த மருத்துவரான உமைர் அஜாஸ் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு தன்னுடைய வேலைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். பின்னர் அங்கு பல மருத்துவமனைகளில் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் அவர் மீது கடந்த ஆகஸ்ட் முதலாம் வாரத்தில் அவரது மனைவி புகார் அளித்தார். அதில் அவர் கூறியதாவது, குழந்தைகள் உட்பட பல பெண்களை ஆடை இல்லாமலும், பாலியல் சீண்டுதல் செய்தும் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனை ஒரு பென்டிரைவில் மொத்தம் 13000 விடீயோக்களை வைத்துள்ளார் என்று அந்த பென்டிரைவை அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி அமெரிக்க காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அதன் பிறகு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பணிபுரிந்த மருத்துவமனையில் கழிவறைகள், செவிலியர் உடை மாற்றும் இடம் மற்றும் நோயாளிகள் அறை என பல்வேறு இடங்களில் மறைக்கப்பட்ட கேமராக்களைப் பொருத்தி வீடியோ எடுத்துள்ளார். அதோடு தன்னிடம் வரும் நோயாளிகள் மயக்கத்தில் இருக்கும் போது அவர்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது, இந்த வழக்கு முடிய பல மாதங்கள் ஆகும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பல மடங்காக இருக்கலாம்.
அதனால் தற்போது அவர் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது கடினமாக இருக்கிறது, அதனால் அவர்களுக்கு காவல்துறையினர் ஒரு மின்னஞ்சல் முகவரியை வழங்கியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 13 ஆயிரம் வீடியோக்கள் இருந்த பென்டிரைவ், ஐபோன், அதோடு 5 எக்ஷ்டேர்னல் டிவைஸ்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் இன்னும் அதிகமான வீடியோக்கள் இருக்கலாம் என்று காவல்துறையினர் கூறிகின்றனர்.